இந்தியாவில் 16 வயது மாணவி ஒருவருக்கு அரிய வகை நோயினால் தோல்கள் வறண்டு 6 வாரங்களுக்கு ஒருமுறை உதிர்வது மீண்டும் வறண்டு போவது என துன்பத்திற்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலினி யாதவ் (16) என்ற பெண் தான், Erythroderma என்ற அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் வந்தால் தோல்கள் சிவப்பு நிறத்தில் மாறி பிறகு அது வறண்டு காணப்படும்.
இந்த நோய்க்கு மருத்துவர்களால் நிரந்தர சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த நோயினால் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்தனது உடலை தண்ணீரில் நினைத்து கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு தன்னுடைய உடலை ஈரப்பதம் உள்ளது போல் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தோல்கள் அதிக அளவு வறண்டு காணப்படுவது குறையும்.
இது போன்ற தாக்கத்தால் அவரது தோல்கள் மிகவும் வறண்டு போய், பாம்புகளில் இருக்கும் உடல் அமைப்பு போன்று காணப்படுகிறது என்று அவரது பள்ளி மாணவ, மாணவிகள் இவரை கண்டு அஞ்சுவதால், பள்ளியில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவரின் தாயார் Devkunwar, இந்த நோய் ஷாலினிக்கு குழந்தை பருவத்திலே வந்துவிட்டதாகவும், இதனால் தனது மகள் அதிக அளவு சிரமத்திற்கு ஆளவதாகவும், நான் இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே, அவள் ஒரு ஆனாதை போல் காணப்படுகிறாள் என்று கண்ணீர் மல்க கூறினார்.
தானும் தன் கணவரும் மகளை படிக்க வைக்க விரும்புவதாகவும், ஆனால் பள்ளியில் அவளை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் கூறினார். இதற்கு அவரின் தோற்றம் தான் காரணம் என கூறுகின்றனர்.