முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் தேசப்பற்று சில காலங்களில் நாட்டு மக்களுக்கு அம்பலமாகும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
காலி உடுகமவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
மிக் தாக்குதல் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகும் போது கோத்தபாயவின் தேசப்பற்றை தெரிந்து கொள்ள முடியும்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த அரசாங்கம் விசாரணை நடத்தியது போன்று தற்போதைய அரசாங்கம் விசாரணை நடத்துவதில்லை.
அனைத்து விடயங்களும் சட்ட ரீதியில் சட்ட நியதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். மிக் தாக்குதல் விமான கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகளின் பின்னர் கோத்தபாய எவ்வாறான தேசப்பற்றாளர் என்பது மக்களுக்கு புரியும்.
அப்போது அரசியல் நிலைமைகள் குறித்து மக்கள் தெளிவடைவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.