Loading...
மட்டக்களப்பு—காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இச்சடலத்தைக் கண்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இச் சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவருடையது என தெரிவிக்கப்படுகிறது.
Loading...
சடலம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Loading...