உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், கொழுப்பை கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும் இந்த பழம் நிச்சயம் கைக்கொடுக்கும்.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளிகொடுக்கிறது மாதுளை. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், கொழுப்பை கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும் இந்த பழம் நிச்சயம் கைக்கொடுக்கும்.
கொலஸ்ட்ரால் கொஞ்சமும் இல்லாத பழம். 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் பயனுள்ளது.
வைட்டமின் சி சத்து நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும். தொடர்ந்து இந்த பழத்தைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு, புற்றுநோய், புராஸ்டேட் பெரிதாகுதல், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறையும். மேலும் இதில் போலிக் அமிலம் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுப்போக்கு, நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.