உலக அரங்கில் நிலக்கரி பாவனையில் ஈடுபடும் நாடுகள் அதனை முற்றாக நிறுத்துவதற்கான உடன்படிக்கையில் கையேழுத்திட்டுள்ளன என பிரித்தானிய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற உலக காலநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருந்த உலகத் தலைவர்கள் புவியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிலக்கரியினை பயன்படுத்தி வரும் 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் பாவனையினை நிறுத்துவதற்கு உறுதியளித்து உடன்படிக்கையில் கையேழுத்திட்டுள்ளன. உலகில் நிலக்கரியினை பயன்படுத்திவரும் போலந்து, வியட்னம், சிலி ஆகிய நாடுகள் இந்த உறுதிமொழியினை அளித்துள்ளன.
இதேவேளை அதிக நிலக்கரிப் பாவனையில் ஈடுபட்டுவரும் அவுஸ்ரேலியா, இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையேழுத்திடவில்லை. நிலக்கரி பாவனையை நிறுத்துவதற்கான உடன்படிக்கை எதிர்காலத்தில் நிலக்கரி மின் உற்பத்திக்கான முதலீடுகளையும் முற்றாக நிறுத்தவுள்ளது.
இந்த இலக்கு எதிர்வரும் 2030 மற்றும் 2040 ஆம் ஆண்டுகளி்ல் எட்டப்படும் என பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு நிலக்கரி பாவனை பாரிய தாக்கத்தைச் செலுத்திவரும் நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.