யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயதான இளம் பெண் ஒருவர் காங்கேசன்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர்.
இதையறிந்த நபரும், அவரது மனைவியும் மல்லாகத்திலிருந்து வெளியேறி தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் கடந்த பல நாட்களாக சந்தேகநபர்களை கண்காணித்து வந்த நிலையில் நேற்று மாலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் பெண்ணின் கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.