சமகால அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் பாரிய பேரணி ஒன்று நேற்று முன்தினம் நடத்தப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான இந்த பேரணி நுகேகொடையில் நடைபெற்றது.
இந்தப் பேரணியில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களும் பங்குபற்றுவர் என பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுகேகொடை பேரணியில் கலந்து கொள்ள ஆயத்தமாக இருந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அவசரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் அவசரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து நுகோகொடை பேரணியில் குறித்த அமைச்சர் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இவ்வாறான நடவடிக்கை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால், குறித்த அமைச்சர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவர் அமெரிக்கா செல்ல வேண்டிய நடவடிக்கைகளில் தூதரம் விரைவாக செயற்பட்டதாக குறித்த ஊடகம் குறப்பிட்டுள்ளது.
குறித்த விஜயத்தில் ஈடுபடுமாறு அரசாங்கத்தின் முக்கிய நபர், குறித்தத அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சரினால், கூட்டு எதிர்க்கட்சியின் பிரபலங்களிடம் இந்த விடயம் பரிமாற்றப்பட்டுள்ளதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.