பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த தினங்களில் மாநாயக்க தேரர்களுடன் சில இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடமஸ்தான விகாராதிபதி, மிரிஸ்வெட்டியே விகாராதிபதி, சாரானந்த பிரிவேனவின் பிரதான தேரர் ஆகியோரை தனித் தனியாக சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பிரதமர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் ரணில், இதற்கு முன்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளிலும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் பொருளாதார விடயங்கள் சம்பந்தமாகவே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.