தனுஷ் நடித்த ‘3‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
இடையில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தனர். தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே தனுஷ் வேறொரு இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தாங்கள் பிரிந்தது தற்காலிகம்தான். நான் மீண்டும் தனுஷ் படத்துக்கு இசையமைப்பேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஒரு இசையமைப்பாளர் ஒரே நடிகரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தால், ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி விடும். அதை தவிர்ப்பதற்காகவே நானும், தனுஷும் சின்ன இடைவெளி ஏற்படுத்திக் கொண்டோம். மீண்டும் நாங்கள் இணைந்து பணிபுரிவோம் என்றார்.