பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை தொடர்ந்து மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த நாணயமாக பாகிஸ்தானின் ரூபாய் சரிந்தது. ஏராளமானோர்க்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இந்தநிலையில், சமீபத்தில் பெட்ரோல் லீட்டருக்கு ரூ.8.03 உயர்த்தப்பட்டு ரூ.145.82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பிரச்சினைகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது கூடுதல் பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்கிறது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை தொடர்ந்து மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (நேப்ரா) மின்சார விலையை ஒரு அலகுக்கு ரூ.1.68 உயர்த்தியுள்ளது. இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.