பத்திரிகையில் உணவு பொதியிடுவது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1980, 26 ஆம் இலக்கத்திலான உணவு சட்டத்திற்கமைய அச்சிட்ட தாள்களில் உணவு பொதியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என கொழும்பு மாவட்ட பொது சுகாதார சங்கங்கத்தின் தலைவர் வஜித தஸநாயக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அப்பம், இடியப்பம், பெட்டிஸ், கட்லட் உள்ளிட்ட எந்தவொரு உணவும் அச்சிடப்பட்ட தாள்களில் பொதியிடுவது ஆபத்தாகும்.
அச்சிட்ட தாள்களில் பொதியிடுவது உணவு சட்டத்திற்கமைய பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறிவிட்டு சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் பத்திரிகையை வாசிப்பதற்கு மேலதிகமாக உணவு சுற்றுவதற்கும், ஏனைய உணவு சுற்றுவதற்குமே பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட்டால் பழைய பத்திரிகைகளை நம்பி வாழும் பலருக்கு தொழிலை இழக்கும் நிலை ஏற்படும். அத்துடன் பத்திரிகை விற்பனை குறைவடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.