Loading...
இம்மாதம், மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இம்மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6,508 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
Loading...
இவற்றுள் 43 சவீதமான டெங்கு நோயாளர்கள், மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 1,828 டெங்கு நொயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலேயே ஆகக்குறைவான டெங்கு நோயாளர்கள் (22 பேர்) இனங்காணப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின், வைத்தியரிடம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading...