இலங்கைப் பொருளாதாரம் ஆபத்தில் உள்ளதை உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு சுட்டெண்கள் எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆரோக்கியமற்ற அபிவிருத்தி செயற்பாடுகளே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்
புளும்பேர்க் உலகளாவிய ஆபத்து சுருக்கம் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் வெளியிட்ட ஊழலுக்கு எதிரான சுட்டெண், உலகளாவிய பட்டினி சுட்டெண் மற்றும் இலங்கையின் பொருளாதார பிட்ஸ் தரப்படுத்தல் ஆகியவற்றில் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கையிருப்பு ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரூபாவின் மதிப்பு குறைவடைவதை தவிர்ப்பதற்கு 100 மில்லி யன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்