கோலிவுட் சினிமா கதி கலங்கிப் போய் இருகிறது.என்ன செய்தால் மீண்டும் ரசிகர்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறது கோலிவுட்.
சிலர் கொஞ்ச நாளைக்கு பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்தவும், தமிழ் ரசிகர்கள் கோபம் தணிந்த பின் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வரலாம் என்கிற முடிற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் மலையாளப்பட இயக்குனர் உண்ணி கிருஷ்ணன் மோகன்லால் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிக்க விஷாலும், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மேஜர் ரவி இயக்கத்தில் தற்போது நடித்துவரும் 1971 படம் முடிந்ததும் உண்ணி கிருஷ்ணன் படத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார்.
ஆனால், ஏற்கனவே தமிழக ஜல்லிக்கட்டு மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய கேரள மாணவர் அமைப்பு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதுப் படத்தில் தமிழ் நடிகர் விஷால் ஒப்பந்தமாகியுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஷால் நடிப்பதால் இந்தப் படத்தின் மீது சின்னதாக ஒரு பரபரப்பு உருவாகியுள்ளது.