கடந்த வருடம் நொவெம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.
குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது ஐபோன் மற்றும் ஐபேட் போன்றவற்றிற்கான உதவித்தகவல்களை வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
எனினும் நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி Australia, Belgium, Brazil, Canada, France, Germany, Hong Kong, Ireland, Italy, Japan, Liechtenstein, Macau, Mexico, Netherlands, Singapore, Spain, Sweden, Switzerland, Turkey, United Arab Emirates, United Kingdom, மற்றும் United States ஆகிய நாடுகளில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
iOS 9 அல்லது அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட பதிப்புக்களில் குறித்த அப்பிளிக்கேஷன் இயங்கக்கூடியதாக உள்ளது.