கன்னியாகுமரி மாவட்டம், பணகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரின் மகள் சுகுணா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் +2 படித்து வருகிறார். இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வீட்டில் இருந்த சுகுணா யாருடனும் பேசாமல் தனியாக அமர்ந்து இருந்துள்ளார்.வீட்டில் உள்ளவர்கள் காரணம் கேட்டும் அவர் கூறவில்லை. இரவு அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
அப்போது சுகுணா வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுகுணாவின் தற்கொலைக்காக காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.