மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் டோம்பிவ்லி சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் அழகான் ஆண் குழந்தை ஒன்றை பெற்றேடுத்துள்ளார். ஆனால், அந்த பெண்ணின் குடும்பம் ஏற்கனவே வறுமையில் வாடியுள்ளது.
அதனால், பிறந்த குழந்தையை எப்படி வளர்ப்பது என தவித்துவந்துள்ளார். குழந்தையை வளர்க்க முடியாது என நினைத்த அவர் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரின் உதவியால் குழந்தையை 1 லட்சத்தி 78 ஆயிரத்துக்கு முலுண்ட் நகரை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதனை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறைக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இதனால், குழந்தையை வாங்கியவர், உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் ஆகியோரை கைது செய்தனர்.