மனைவியை கொன்றுவிட்டு, குழந்தையுடன் தப்பியோடிய கணவரை பிடிக்க பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கணவனால் தாக்கப்பட்ட மனைவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாலிம்படை வடக்கில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஒரு பிள்ளையின் தாயான 33 வயதான ஹர்ஷா நிஷானி களுஆராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரான கணவர், கடந்த 9ஆம் திகதி தனது மனைவி மற்றும் மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தனது மனைவி மற்றும் தாயாரை தாக்கியுள்ளார்.
மனைவி உயிரிழந்தார். மாமி படுகாயமடைந்தார்.
சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவர் தனது 2 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த உயிரிழந்த மனைவியின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.