ரஜினி நடிப்பில் சூப்பர், டூப்பர் ஹிட்டான பாட்ஷா படம் சமீபத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகும் டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளிவந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால் இப்படத்தை ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் புதுப்படங்கள் எப்போது வெளியானாலும், ஜப்பானிலும் வெளியிடப்படும். அதேபோல், டிஜிட்டலில் மாற்றப்பட்ட ‘பாட்ஷா’ படமும் தற்போது வெளியாகவிருக்கிறது.
வருகிற பிப்ரவரி 25-ந் தேதி ஜப்பானில் இப்படம் திரையிடப்படவிருக்கிறது. இப்படத்தில் நக்மா, ரகுவரன், தேவன், ஜனகராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். டான், ஆட்டோ டிரைவர் என இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.