தென்ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த பெண்ணை போதை தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து விமானம் மூலம் போதை பொருள் கடத்தி வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்த அவர்கள், விமான நிலையத்தில் உஷார் நிலையில் இருந்தனர்.
அப்போது சுற்றுலா விசாவில் பிரேசிலிருந்து அபுதாபி வழியாக சென்னை வந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரின்சஸ் நோத்பிபிதி சோமி (47) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை பொலிஸ் அதிகாரிகள் ஸ்கேன் மூலம் உடல் சோதனை செய்தனர்.
அதில், அவரது வயிற்றில் சுமார் 1 கிலோ எடை கொண்ட 82 போதை மாத்திரைகளை இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.5 கோடி என தெரியவந்துள்ளது
பின்னர் அந்த கடத்தல் பெண்ணை கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.