மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாலிவுட் படத்தின் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான குவான்டிகோ மூலம் வெளிநாடுகளில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.
அவர் ட்வெய்ன் ஜான்சனின் பேவாட்ச் படத்தில் வில்லியாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் பேவாட்ச் படத்தின் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவள் அழகை பார்த்து மயங்கிவிட வேண்டாம். அவள் ஆபத்தானவள் என மோஷன் போஸ்டர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. நியூயார்க் நகரில் வீடு வாங்கியுள்ள அவர் அண்மையில் மும்பையில் ரூ.100 கோடிக்கு வீடு வாங்குவதாக செய்திகள் வெளியாகின.
பிரியங்கா படங்கள் தவிர்த்து விளம்பரப் படங்களிலும் நடித்து கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.