சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற படகொன்று தீடிரென மாயமானதையடுத்து அதில் பயணம் செய்த பயணிகளில் நிலை என்ன குறித்து மீட்பு குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
நேற்று (சனிக்கிழமை) சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற 28 சீனர்கள் கிழக்கு சபா மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவுக்கு படகில் புறப்பட்டு சென்றனர். இதன்போது மேலும் 3 பேர் கோட்டா கினாபாலு என்ற இடத்தின் அருகே சென்ற போது படகில் ஏறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, குறித்த பயணிகள் படகு திரும்பி வராததால் அதை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தட்பவெப்பநிலை மோசமாக இருப்பதால் குறித்த படகு விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே அந்த படகை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இத்தகவலை மலேசிய கடல் போக்கு வரத்துதுறை தெரிவித்துள்ளது.