சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. நீரில் சில சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். சீரகம் பொதுவாக வயிறு உப்புசத்தை சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு சம்பந்த பாதிப்பை குணப்படுத்தும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனை குடிப்பதால் இன்னும் பல அற்புத நன்மைகள் உண்டாகும். அவை எவையென கண்போம்.
சில தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அவர்கள் தொடர்ச்சியாக சீரக நீரை குடித்து வந்தால் பால் சுரப்பது நீடிக்கும். அதிகமாகும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்து வந்தால் சர்க்கரையில் அளவு ரத்தத்தில் கட்டுக்குள் வரும்,குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும்,கல்லீரலில் படியும் அதிகப்படியான நச்சை வெளியேற்றும். இதனால் கல்லீரலில் வேலை குறைவதோடு அதன் ஆரோக்கியமும் அதிகமாகும் ,மாதவிடாயின் போது உண்டாகும் வலி மற்றும் கர்ப்ப காலத்தின் போது உண்டாகும் ஃபால்ஸ் வலியை போக்க சீரக நீர் உகந்தது.
சீரகத்தில் அதிகமாக விட்டமின் ஈ இருப்பதால் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கிறது. இது செல்லிறப்பை தடுத்து முதுமையை தடுக்கிறது. முக்கியமாய் நரை முடியை தடுக்கும். நல்ல சருமத்தை தரும். சுருக்கங்களின்றி இளமையான சருமத்தை தரும்.