சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் படபிடிப்புகள் தற்போது ஜரோப்பிய நாடுகளில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது.
அஜித்துக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்க, அக்ஷரா ஹாசன், கருணாகரன், தம்பி ராமையா, விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது.
இதற்கிடையில், இப்படத்தின் மூன்று புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, இப்படம் குறித்து பாரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சிவா இயக்கி அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய ஆங்கிலத்தில் V வரும்படியாக அமைந்ததால், அஜித் நடிக்கும் இந்த படத்திற்கும் ஆங்கிலத்தில் V வரும்படியான தலைப்புதான் வைக்கப்படும் என்று ஒரு செய்தி பரவியது.
அதன்படி, இப்படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. இதில், ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் தங்களின் பரிசீலனையில் முதல் இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெப்ரவரி 2ஆம் திகதி வெளியாகவுள்ளது. இன்றைய தினம், இப்படத்தின் தலைப்பு குறித்த வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.