பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி, அரையிறுதி தோல்விக்கு பின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய, அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேத் யூ வேட் கொடுத்த கேட்ச்சை, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கோட்டைவிட்டார்.
இதனால் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், ஹசன் அலி தான் என்று அந்நாட்டு ரசிகர்கள் அவரை சீண்ட ஆரம்பித்தனர். குறிப்பாக அவருடைய மனைவியையும், இணையதளங்களில் மோசமாக பேசினர்.
இதைப் பற்றி எதுவும்வே கூறாமல் இருந்த ஹசன் அலி, முதல் முறையாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை நான் அறிவேன்.
இதனால் அனைவரும் வருத்தமாக உள்ளீர்கள் என்பது தெரியும்.என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள், நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிக உயர்ந்த அளவில் சேவை செய்ய விரும்புகிறேன். கடின உழைப்பினால் திரும்புவேன், என்று குறிப்பிட்டுள்ளார்.