கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘டோரா’ திரைப்படம் வரும் மார்ச் 3-ம் திகதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை சற்று முன் பார்த்தோம்.
இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ‘கொலையுதிர்க்காலம்’. சுஜாதா நாவலின் டைட்டிலை கொண்ட இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.’உன்னை போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.
திகில் மற்றும் மர்மம் கலந்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ராபி பாம்கார்ட்னர் ஒளிப்பதிவும், ராமேஷ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர்.
இந்த படத்தில் நயன்தாரா காதுகேளாத, வாய்பேசாத கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.