அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பு நடக்கும் போது, சிறுநீர் கழிக்கவோ, அல்லது வேறு சில காரணங்களுக்கோ அனுமதியில்லை என்று விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கு பயிலும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த பள்ளியில் பயிலும் ஒரு மாணவி வகுப்பு நடக்கும் போது அவசரமாக சிறுநீர் கழிக்க ஆசிரியடம் அனுமதி கேட்டிருக்கிறார்.
ஆனால் ஆசிரியரோ பள்ளி விதிகளை சுட்டிக்காட்டி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். இதனா தனது வகுப்புக்கு அடுத்த அறையில் இருந்த வாளியில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனால், பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, சிறுநீர் கழிக்க அனுமதிக்காத பள்ளியின் விதி முறையில் மாற்றம் செய்ய வேண்டியும், தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டியும் அந்த மாணவி வழக்கு தொடர்ந்தார்.
மாணவியின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரின் கோரிக்கை நியாமானது தான் என கூறி, பள்ளியின் விதியை மாற்ற உத்தரவிட்டதோடு, இந்திய மதிப்பில் ரூ. 8 கோடியே 85 லட்சமும் அந்த மாணவி சந்தித்த தர்ம சங்கடத்துக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.