உலகம் முழுவதும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல், அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட ஆபத்துக்களை கணித்து உலகை எச்சரிக்கும் விதமாக அழிவை காட்டும் கடிகாரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிகாரத்தை அமெரிக்கா சிக்காகோ பல்கலைக்கழகத்தின் முதல் அணு ஆயுத உருவாக்கத்தில் அங்கம் வகித்த விஞ்ஞானிகள் குழுவினர் ஊடாக, அணு இதழ் கடந்த 1945 ஆம் ஆண்டு தொடங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தவகையில், உலக அழிவைக்காட்டும் கடிகாரத்தின் படி இரண்டரை நிமிடங்களில் பூமி அழியும் என அணு இதழ் வெளியிடும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அழிவை காட்டும் கடிகாரம் அணு விஞ்ஞானிகள் குழு சார்பில் 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கடிகாரம் நள்ளிரவு 12 மணியை காட்டும் போது உலகம் அழியும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மேலும், இதனால் உலக அழிவை காட்டும் கடிகாரத்தில் நள்ளிரவுக்கு இரண்டரை நிமிடங்களுக்கு முன்பாக முற்களை நகர்த்தியுள்ளதாக கூறப்படுகின்றது.