Loading...
கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் ‘ரெசிடெண்ட் ஈவில்’. அதனைத் தொடர்ந்து ‘ரெசிடெண்ட் ஈவில்’ படத்தின் 5 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் 6வது பாகம் ‘ரெசிடெண்ட் ஈவில்: கடைசி பாகம்’ வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரைகளில் வெளியாகிறது. அநியாயத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் இந்த பாகத்துடன் முடிவடைகிறது. இப்படத்தை பால் டபிள்யூ.எஸ். ஆன்டர்சன் இயக்கியுள்ளார்.
Loading...
பிரபல ஹாலிவுட் நடிகை மில்லா ஜோவோவிச் நடிப்பில் ஆக்ஷன் ட்ரீட்டாக வெளிவர உள்ள இந்த படத்திற்கு விளம்பர பாடல் ஒன்று தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த பாடலை சுனிதா சாரதி பாடியுள்ளார். சந்தோஷ் தயாநிதி ‘கட்டபாவ காணோம்’ ‘இனிமே இப்படிதான்’ படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...