மட்டக்களப்பில் மீன் பிடிக்கச் சென்ற நபர் மாயமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளார்.
அவர் பயணித்த படகு செட்டிபாளையம் கடல் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு திரைமடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மீனவர் நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ந்ததை அடுத்து அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளர்.
இதேவேளை படகு செட்டிப்பாளையம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.