அப்படிப் பார்த்தால் இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் 7 லட்சத்தை பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெற்றுள்ளார். எனவே இசைவாணி மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது தன்னுடைய அழுகையை காண்பித்துக் கொள்ளாமல் மிகுந்த சந்தோஷத்துடன் வெளியேறினார்.
இவர் தொடக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் போது வெற்றியாளராக மாறுவதற்கு அதிக வாய்ப்பிருந்தது. ஆனால் அவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய தவறிவிட்டார்.
அதற்கு மாறாக சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவதிலும், மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டதிலும் அதிக நேரம் செலவிட்டார். இதனை பொறுத்துக் கொள்ளாத பிக்பாஸ் ரசிகர்கள் இசை வாணிக்கு குறைந்த வாக்குகளை அளித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்துவிட்டனர்.
ஆனால் அவர் வீட்டிலிருந்து செல்லும்போது 7 லட்சத்தை கையோடு கொண்டு சென்று உள்ளார் என்ற தகவலை அறிந்த பிக்பாஸ் ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.