சென்னை: இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
ஆசை ஆசையாய் காதலித்து மணந்த கணவர் ஏ.எல். விஜய்யை அமலா பால் பிரிந்தார். கணவரை பிரிந்த பிறகு அவர் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு படங்களை தவிர வேறு நினைப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. இதை எல்லாம் கணிக்க முடியாது. வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என அமலா கூறியுள்ளார்.
நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது. அதனால் வருவதை ஏற்றுக் கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டும். நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம் என்கிறார் அமலா.
தற்போது நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம். இரண்டு அழகான நபர்கள் தவறான கதையில் சந்தித்துக் கொண்டதாகிவிட்டது எங்கள் வாழ்க்கை என அமலா தெரிவித்துள்ளார்.
எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியுள்ளார். அமலா நடிப்பு தவிர தற்போது பாட்டு பாடுவதிலும் கவனம் செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.