நமது கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் சடங்குகள் பல வகைகள் உள்ளது. அப்படி செய்யப்படும் சடங்குகள் எதற்காக என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
அந்த வகையில் நமது வீட்டில் ஒரு பெரியவர் இறந்தால் அவரது மூத்த மகனுக்கு மொட்டை அடிப்பார்கள். இந்த சடங்கு ஏன்? எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
வீட்டில் இருக்கும் பெரியவர் இறந்தால் மொட்டை அடிப்பது ஏன்?
முந்தைய காலத்தில், நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் இறந்து விட்டால், அவரின் மனைவிக்கு மொட்டை அடிப்பார்கள். ஆனால் தற்போது அந்த மாற்றங்கள் மாறி, இறந்தவர்களின் மகனுக்கு மொட்டை அடிக்கும் பழக்கம் பின்பற்றி வருகிறது.
மனைவிக்கு மொட்டை அடிப்பது ஏன்?
பெண்களுக்கு தலைமுடி குறைவாக அல்லது தலைமுடி இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு அழகு சார்ந்த ஈர்ப்பு மற்றும் தாம்பத்திய எண்ணங்கள் குறையும்.
இதனால் அவர்கள் தன் கணவன் இறந்த பின் வேறு நபர்கள் மீது ஆசைக் கொள்ளக் கூடாது என்பதற்காக தான் கணவன் இறந்த மனைவிக்கு மொட்டை அடிக்கிறார்கள்.
மகனுக்கு மொட்டை அடிப்பது ஏன்?
வீட்டில் பெரியவர் இறந்த மறுநாள் அல்லது அந்த நாள் மாலையே அவருடைய மகனுக்கு மொட்டை அடிப்பார்கள்.
ஏனெனில் அந்த ஆணுக்கு ஈகோ குறைந்து, குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்க வேண்டும். மேலும் அவர் நல்லொழுக்கத்துடனும், தன்னலமற்று குடும்பத்திற்காக உழைப்பவராகவும், அப்பாவுக்கு அடுத்ததாக அவர் தான் அந்த குடும்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுகள் ஏற்படுவதற்காக மகனுக்கு மொட்டை அடிக்கிறார்கள்.
நமது வீட்டிற்கு வெளியாட்கள் யாவரேனும் வந்தால், அவர்கள் மொட்டை அடித்து இருப்பதை பார்த்து அந்நபரின் வீட்டில் துக்கம் ஏற்பட்டுள்ளது என அறிந்துக் கொண்டு அவர்களின் சூழ்நிலையை புரிந்து அவரிடம் நல்லப்படியாக நடந்துக் கொள்வார்கள்.
மொட்டை அடிப்பதால் உளவியல் ரீதியாக அந்த நபரிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உணர்வு ரீதியாக அவர் ஒருமுகப்படுத்தப்பட்டு குடும்பத்திற்கு தலைமை தாங்குவார்.
இது குடும்பத்தின் பற்றை அதிகரிக்கும், நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என்று கூறுகின்றார்கள்.