புதுச்சேரியில் உள்ள ஒரு பல்கலையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் பழனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி புஷ்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்கள்.
அந்த வீட்டின் உரிமையாளரின் மகன் விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). விக்னேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறான்.
இந்நிலையில் விக்னேஷிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தோலில் ஒருவித நோய் போன்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த பள்ளி தோழர்கள் விக்னேஷை கேலி செய்திருக்கிறார்.
இதனால் விரக்தி அடைந்து காணப்பட்ட விக்னேஷிற்கு, புஷ்பா ஆறுதல் கூறியிருக்கிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தவறான தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்களின் தவறான பழக்கம் விக்னேஷின் தாயாருக்கு தெரிய வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர்கள் புஷ்பாவை கண்டித்து வீட்டை காலி செய்யுமாறு கூறியிருக்கிறார்.
வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்ற புஷ்பா, விக்னேஷ் உடனான தொடர்பை தொடர்ந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த விக்னேஷின் தாய் அவனை கண்டித்திருக்கிறார். ஆனால் விக்னேஷோ தாயிடம் சண்டை போட்டிருக்கிறான்.
வேறு வழி தெரியாத விக்னேஷின் அம்மா, குழந்தைகள் நல கமிட்டியில் புகார் செய்திருக்கிறார். அவர்கள் ரகசியமாக விசாரித்ததில் புஷ்பா மீது தவறு இருப்பது உறுதிப்படுத்தினர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.