மாணவன் நினைத்தால் சாதித்துக் காட்டுவான். என்பதற்கு உலகம் முழுக்க உதாரணம் ஆகிப் போனான் தமிழ் மாணவன்.
இளைஞர் சக்தி என்ன என்பதை நிரூபித்து விட்டான் தமிழன். அதே போல சத்தமில்லாமல் செய்த இன்னொரு சாதனை திரையரங்குகளில் அடைபட்டு கிடந்த இளைஞர்களை மீட்டெடுத்தவனும் இளைஞன் தான்.
கட்டவுட்டுக்கும் பால் ஊற்றுவதும், பேனர் வைப்பதும் முடிவிற்கு வந்து விட்டது. நடிகன் பேசும் வசனம் வெறும் பேப்பர் சபதம் என்பதையும் இளைஞன் உணர்ந்து விட்டான்.
அப்படி முடிவை நோக்கி போகும் முதல் நடிகன் ரஜினி. நாற்பது ஆண்டுகாளாக தமிழர், தமிழ் மண், தமிழே மூச்சு என்று சொல்லி ஏமாற்றி வந்தவர் ரஜினி.
ஆனால், தமிழ் மண்ணுக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவே இல்லை. சரி அவர் என் கிள்ளிப் போட வேண்டும் என்று கேட்கலாம்.
அதற்கும் ரஜினி தான் காரணம். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அரசியல் கனலை மூட்டி விட்டு தனது படத்தை பரபரப்பாக ஓட வைத்து விட்டு இமயமலையில் போய் பதுங்கிக் கொள்வார்.
இளிச்சவாயன் தமிழனும் கொஞ்சம் பொங்கி விட்டு அடுத்த காரியத்துக்கு போய் விடுவான். இனி அது நடக்காது என்பதன் அறிகுறி தான் இப்போது ரஜினி பற்றி சமூகவலைத்தளங்களில் ரஜினிக்கு எதிராக வைக்கப்படும் மோசமான குற்றச்சாட்டு.
வசைபாடித் தீர்க்கிறார்கள் இளைஞர்கள். இது ரஜினிக்கும் தெரியாமல் இருக்காது.
உடல் நலமும் மிக மோசமான கண்டிஷன் என்கிறார்கள். அனேகமாக ஷங்கர் படத்தோடு மூட்டை முடிச்சுக்களோடு சத்தம் இல்லாமல் அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிடுவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நடிகர்கள் சகாப்தம் முடிவிற்கு வந்து விட்டது. அதற்கு காரணம் இளைஞன், மாணவன். மாணவம் வெல்லட்டும்.