முட்டையில் புரதசத்து அதிகமாக உள்ளது. இதனால், தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு ஆரோக்கிய பலன்களை தரவல்லது. இந்நிலையில், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாது. அவை என்னென்ன உணவுகள் என இப்போது பார்போம்.
இறைச்சி : பெரும்பாலானோர் இறைச்சியுடன் முட்டையை சேர்த்து சாப்பிட விரும்புவோம். ஆனால், இரண்டிலும் புரதம் அதிகமாக உள்ளதால் வயிறு மந்தமாக இருக்கும். செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
சர்க்கரை : சர்க்கரை மற்றும் முட்டையை ஒன்றாக சேர்க்கும் போது அமினோ அமிலம் வெளியிடப்படுகின்றன. இதனால், உணவு நச்சு தன்மை உடையதாக மாறும். மேலும், ரத்தம் உறைத்தலையும் தவிர்க்கும்.
சோயா பால் : சோயாவும் புரதசத்து அதிகமாக உள்ளதால் முட்டையை சேர்த்து சாப்பிடும் போது புரத்ததை உறிஞ்சும் சக்தி குறையும். இதனால், இந்த கலவையை தவிர்க்க வேண்டும்.
தேநீர் : சிலர் தேனீருடன் முட்டையை சாப்பிட விரும்புவர் ஆனால், அப்படி சாப்பிடுவதால் பல உடல்நல கோளாறுகள் ஏற்படும். அப்படி சாப்பிடுவதால் மலசிக்கல், மற்றும் உள்ளுறுப்புகள் சேதம் ஆகியவை ஏற்படும்.