எனது மகனை அடித்துக் கொன்றுவிட்டு பஞ்சமாபாதகன் நின்மதியாய் இருக்கின்றான் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரால் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது பாலசுந்தரத்தின் தந்தை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசல் முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலர் எனர் மகனைத் தாக்கிப் படுகொலை செய்ததுமல்லாமல் பஞ்சமா பாதகன் சந்தோஷமாக திரிகின்றான் என்று பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் பாலசுந்தரம் என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே இவர்களது கள்ள வேலைகள் எனது மகனுக்கு தெரிந்திருக்கின்ற காரணத்தினால் தான் 15 பேரை வைத்து அடித்தும் வெடி வைத்தும் கொன்றுள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு இராஜாங்க அமைச்சரின் வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன? அல்லது அவரது வீதியிலுள்ள மற்றய கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன? எனவும் கேள்வியெழுப்பியதோடு, திட்டம் போட்டு அடித்தும் வெடி வைத்தும் கொலை செய்துள்ளனர் என்பது தான் உண்மையாய் இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
நாங்களும் மாதக்கணக்கில் நீதிமன்றத்தில் அலைந்து திரிகின்றோம். எமது கண்ணீருக்கான பதில் கடவுள் நிச்சயம் தருவான் என அவர் மேலும் தெரிவிததுள்ளார். குறித்த வழக்கு விசாரனை டிசம்பர் மாதம் 13ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.