தனது 12 வயதான மகளிடம் சேட்டை விட்ட அயலவரின் காதை அறுத்ததுடன், கத்தியாலும் வெட்டி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்று (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில் 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்த அயலவரே இவ்வாறு சரமாரியாக வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம் வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் பொதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடரபாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.