மாதகல் – குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டன்களுடன் குவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மாதகல் – குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான ஒரு பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடியுள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட கொட்டன்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டுள்ளதுடன் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ் அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் எனவும் பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.