டிசம்பரில் நாட்டை மூடுவது தொடர்பாக உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் நடத்தப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ரமேஷ் பத்திரன, இதுவரை கோவிட்-19 தடுப்பூசியைப் பெறாத அனைத்து நபர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்மஸ் வாரத்தில் பொதுக் கூட்டங்களை மட்டுப்படுத்துவதற்காக நாட்டை மூடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் வினவியபோது, சுகாதார அமைச்சு உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து கடந்த சில நாட்களாக பல போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டது, இது வருந்தத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அனைத்து தரப்பினரையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.