Loading...
தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும்.
ஆனால் எதனால் தாமரை இலையில் மட்டும் நீர் ஒட்டுவதில்லை என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தாமரை இலையில் நீர் ஒட்டாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
நாம் தாமரை இலையின் மீது தண்ணீர் ஊற்றும் போது, அது அந்த நீர்த்துளிகள் இலையின் மீது ஒட்டுவதில்லை.
ஏனெனில் தாமரை இலை மீது, மிக நுண்ணிய அளவில், கூர்மையான ஊசி போன்ற அமைப்புகள் உள்ளன.
Loading...
எனவே நீர்த்துளி, தாமரை இலையின் மீது வந்து விழும் போது, அந்தத் துளி, மூன்று நான்கு நுனிகளின் முகட்டில் படிகிறது.
தாமரை இலையில் இருக்கும் ஊசி போன்ற அமைப்புகள், மெழுகு போன்ற ஒரு பொருளினால் ஆனது.
மேலும் தாமரை இலையில் இருக்கும் அந்த ஊசி அமைப்புகள் நீரை விலக்கும் தன்மையை பெற்றுள்ளதால் தான் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் முத்து போன்று தரையின் மீது விழுகின்றது.
Loading...