பொதுவாக எந்த பலகாரங்கள், பாயாசம் மற்றும் இனிப்பு வகைகள் என எடுத்தாலும் அதில் முந்திரி பருப்பு இல்லாமல் நாம் அலங்கரிப்பது கிடையாது. காரணம் அந்த அளவுக்கு இதன் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.
முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்து, இரும்புசத்து, செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது.
இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
முந்திரியின் ஆரோக்கிய நன்மைகள்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல் மற்றும் பலவற்றிற்கு முந்திரி நன்மை பயக்கும்.
பசியின்மையை ஏற்படுத்துவதால் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகின்றன.
முந்திரி எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. முந்திரியை உணவில் சேர்ப்பது HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.
வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் முந்திரி பருப்பை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் குறையும்.
முந்திரியை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் வறுத்த முந்திரியில் அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகள் உள்ளன.
முந்திரி பருப்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக எடுத்து கொண்டால் என்ன நடக்கும்?
முந்திரியை அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது ஒவ்வாமை ஏற்படும் போது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
அதிக அளவு முந்திரிகளை சாப்பிடுவது சிறுநீரக பாதிப்பு போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவை அதிக அளவு ஆக்சலேட் பண்பை கொண்டிருக்கின்றன.
முந்திரி, டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் போன்ற நச்சு நிறைந்த அமினோ அமிலங்கள் ஆகும். அமினோ அமிலங்கள் என்று வரும்போது உணர்திறன் கொண்டவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
யார் எடுத்து கொள்ள கூடாது?
முந்திரியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருப்பதால், வீக்கத்தை எதிர்த்துப் போராட விரும்புவோர் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக முந்திரியை தவிர்க்கவேண்டும்.
உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், முந்திரி சாப்பிட்ட பிறகு நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். எனவே இவர்கள் தவிரக்க வேண்டும்.