ஸ்டோகஸ், ஆர்ச்சரை தக்க வைக்காதது ஏன் என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்கக்காரா விளக்கமளித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 14 கோடிக்கு சஞ்சு சாம்சானையும், 10 கோடிககு ஜோஸ் பட்லரையும், 4 கோடிக்கு ஜெய்ஸ்வாலையும் தக்க வைத்துள்ளது.
ஸ்டோக்ஸ், ஆர்ச்சரை ராஜஸ்தான் அணி தக்க வைக்காதது ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து அந்த அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநர் குமார் சங்கக்காரா விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, இந்த முடிவு மிகவும் கடினமானது. இருவரும் தற்போதைய கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்கள் ஆவர்.
பென் ஸ்டோக்ஸ் நீண்ட நாட்களாக நான் பார்த்த சிறந்த ஆல்ரவுண்டர். அவர் போட்டியை வெல்லும் வீரர், ஸ்டோக்ஸ் அந்த திறனை ராஜஸ்தான் அணிக்காவும் வெளிப்படுத்தியுள்ளார்.
அணி வீரராகவும், வழிநடத்துவதிலும் அவர் மிகச்சிறந்த வீரர்.
எத்தனை வீரர்களை எங்களால் தக்க வைக்க முடியும் என்பது ஆலோசிக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக வீரர்களின் இருப்பு, அதாவது, தொடரில் எதுவரை அணிக்காக விளையாடுவார்கள் என்பது குறித்து அலோசிக்க வேண்டியிருந்தது.
இதேதான் ஆர்ச்சருக்கும், அவருடைய காயத்தின் தன்மை, மீண்டு வரும் நாட்கள் ஆகியவற்றைக் கண்டறிய எல்லாவற்றையும் செய்தோம்.
கிரிகெட்டின் 3 வடிவத்திலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஆர்ச்சர் போன்ற ஒரு சிறப்பான வீரர் இருந்ததில்லை.
அவர்கள் அதிருப்தியடைந்திருந்தாலும் எங்கள் நியாயத்தை வீரர்கள் புரிந்துக்கொள்வார்கள் என எனக்கு தெரியும் என சங்கக்காரா விளக்கமளித்துள்ளார்.