அரசாங்கத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தப் போகும் அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
2250 வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வரிச்சலுகை வழங்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்று இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இதனைச் சமர்ப்பிக்கவுள்ளார். குறித்த அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்கும் வகையில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனம் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் ரூபா வரையான வரிப்பணத்தை அரசாங்கம் இழக்க நேரிடும்.
இதன் மூலம் சுமார் 1800 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமான இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இதன் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் , முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் பிரச்சாங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.