Loading...
பெரும்பாலானவர்களுக்கு கழுத்துவலி, மூட்டுவலி, இடுப்புவலி பிரச்சனைகள் இருக்கும்.
இதற்கு நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல், உணவு பழக்கவழக்க முறைகள் காரணமாக உள்ளது.
Loading...
எனவே இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு, தினமும் ஒருசில உடற்பயிற்சிகளை செய்து வந்தால், விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூட்டு மற்றும் இடுப்பு வலி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
- நமது காலின் பாதத்தை மற்றொரு காலின் மீது வைத்துக் கொண்டு அதனுடைய அடி பாதத்தை மசாஜ் போல செய்து வர வேண்டும். இதே போல இரண்டு கால்களையும் மாற்றி 10 நிமிடம் செய்து வர வேண்டும்.
- கால்களின் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, சிறிது நேரம் நிற்பது போன்று, நமது கால்களின் பாதங்கள் வலி எடுக்கும் வரை தொடர்ந்து இரண்டு கால்களையும் மாற்றி செய்ய வேண்டும்.
- முந்தைய பயிற்சியை போன்று நமது கால்களின் வீரல்களை தரையில் ஊன்றிக் கொண்டு முன்னும் பின்னுமாக நடைப்பயிற்சியை செய்து வர வேண்டும். இதனால் கால்கள் மற்றும் அதன் விரல்களின் சீரான ரத்தோட்டம் ஏற்பட்டு வலிகள் குறையும்.
- ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை தூக்கி வட்ட சுழற்சி முறையில் மெதுவாக சுழற்ற வேண்டும். இதே போல இரண்டு கால்களுக்கும் செய்ய வேண்டும்.
- நமது கால்களின் பாதங்கள் சீரான ரத்தோட்டத்தை பெறுவதற்கு, ரப்பரை கால்களில் மாற்றிக் கொண்டு ஒவ்வொரு காலுக்கும் 8 வினாடிகள் என்று மாற்றி மாற்றி செய்து வர வேண்டும்.
- தரையில் ஒரு பென்சிலை வைத்து, அதை நமது கால்களின் விரல்களைக் கொண்டு எடுத்து, பின் தரையில் போட வேண்டும். இதேபோல ஒவ்வொரு கால்கள் மூலம் 10 வினாடிகள் செய்து வர வேண்டும்.
Loading...