இலங்கை பொலிஸாருக்கு எதிராக தொடர்ந்தும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை குறைத்து, நாட்டில் பொலிஸ் சேவையின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தின் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அமுனுகம, இளைஞர்களின் பங்களிப்புடன் கிராமிய பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சமூகக் காவல் திட்டத்தின் கீழ் 2021 மே 03 அன்று 226/17 என்ற அதிவிசேட வர்த்தமானி மூலம் சமூகப் பொலிஸ் சேவைகளுக்கான இராஜாங்க அமைச்சு நிறுவப்பட்டது.
குற்றச்செயல்களை முற்றாக ஒழித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவில் இருந்தும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என்றார்.