நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், புஜாரா அவுட் ஆகி வெளியேறிய வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று துவங்கியது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் சதம் அடித்து 120 ஓட்டங்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார்.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் நட்சத்திர வீரரான சட்டீஸ்வர் புஜாரா , சுழற்பந்து வீச்சாளரான அஜாஜ் பட்டேல் பந்து வீச்சை இறங்கி அடிக்க முயன்றார்.
ஆனால், பந்தானது அற்புதமாக அவரை ஏமாற்றி போல்டாகியது. இதனால் 5 பந்துகளில் புஜாரா ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.