தேசிய பாதுகாப்பினை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
போர் இடம்பெற்ற காலத்தில் கடற்படை, விமானப்படை, இராணுவம், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உயிர்த் தியாகத்துடன் செய்த சேவை ஒருபோதும் மறக்கப்படக்கூடியதல்ல.
போரில் உயிர் நீத்த, உடல் பாகங்களை இழந்த அனைத்து படைவீரர்களுக்கும் நாட்டு மக்கள் என்றும் நன்றிகடனுடையவர்களாய் திகழ்வார்கள்.
தேசியப் பாதுகாப்பு கடமைகளை உறுதி செய்வதற்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் உன்னத பணியினை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு படைவீரர்களுக்கு உண்டு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.