ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பதில் கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற் குழுவில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது.
இதற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக இந்திய அணி வருகிற 8 அல்லது 9-ந்தேதி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்ல இருந்தது.
இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பதில் கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற் குழுவில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி தொடங்க இருந்தது. தற்போது இந்த டெஸ்ட் வருகிற 26-ந் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11 அல்லது 12-ந்தேதி கேப்டவுனில் தொடங்கலாம் என்றும் தெரிகிறது.
டெஸ்ட் போட்டிக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையேயான நான்கு 20 ஓவர் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகிறது. அது பின்னர் நடத்தப்படும்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே மாற்றி அமைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் ஆட்டங்கள் நடைபெறும் தேதி, இடங்கள் குறித்து சில தினங்களில் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும்.
இந்திய அணி வருகிற 16-ந்தேதி மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.