Loading...
தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, அதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
Loading...
புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரொன் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதேநேரம், கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின் அதுகுறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
Loading...